தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் திரு.ருஷான் மலிந்தவின் பூரண ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட உழைக்கும் மக்களுக்கான தேசிய மே பேரணி அம்பாறை மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் நீர்ப்பாசன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு.ரொஷான் ரணசிங்க அவர்களின் கௌரவ பிரசன்னமானது இடம்பெற்றது.
இந்த பேரணியில் சிங்கள, சினில், மற்றும் முஸ்லிம் சமூகங்கள் உட்பட பல்வேறு இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பலதரப்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் ஒரு அங்கமாக உழைக்கும் மக்களின் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் 'Ayubo' Labour Pride விருதுகள் வழங்கப்பட்டன.