ஆம் ஒரு புதிய கட்சி.இன்றைய நாட்களில் அனைவராலும் பேசுப்படும் ஒரு விடயம். அதுவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கக் கூடிய புதிய அரசியல் பயணம். சம்பிரதாயத்திற்கு அப்பால்பட்ட புதிய அரசியல் திருப்பம் ஒன்றை நாட்டிற்கு அறிமுகம் செய்து வைப்பற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்.அந்த திருப்புமுனையின் ஒரு பக்கமே இது.
தேசிய ஜனநாயக முன்னணி
பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு அப்பால் பரந்து விரிந்து கிடக்கும் தேசிய ஜனநாயக முன்னணியின் முதன்மையான நோக்கம் என்னவெனில் வளமான இலங்கையை உருவாக்குவதேயாகும். அதற்காக, மக்கள் சார்பாக அனைத்து சலுகைகளையும் மறுத்து, பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ளோம். கடந்த கால தேசியத் தலைவர்களுக்குப் பிறகு இந்த நாட்டிலிருந்து மங்கிப்போன 'மாண்புமிகு அரசியலை' மீண்டும் நாட்டில் நிலையோங்க பாடுபடுகிறோம்